விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்ட இராணுவத்துக்காக மைத்திரி எடுத்துள்ள நடவடிக்கை!

0

PrintReport14SHARES

இலங்கையில் விடுதலைப் புலிகளினுடனானபோரின்போது அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்கான சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் ஆயுட்காலம் முழுவதும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடமையின் போது உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்களிற்கான கொடுப்பனவுகளும் சம்பளமும் வழங்கப்பட இருக்கின்றன.

அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் எட்டுக் கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. தற்சமயம் சகல கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்தத் தீர்மானங்களை அமுல்படுத்துவது ஜனாதிபதியின் இலக்காகும் என்று அறிவிகப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.