விற்பனையில் சாதனை செய்யும் ‘நடுகல்’ ஈழ நாவல்!

0

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவல், விற்பனையில் சாதனை செய்து வருவதாக, நாவலின் பதிப்பாளர் வேடியப்பன் கூறியுள்ளார்.

சென்னைப் புத்தக கண்காட்சியை முன்னிட்டுவெளியாகியுள்ள நடுகல் நாவலை தமிழகத்தில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வெளியாகி இருபது நாளிலேயே 600 பிரதிகள் வரையில் இந்த நாவல் விற்பனை ஆகியுள்ளது. 

அண்மைய கால புத்தக விற்பனைகளில் இது பெரும் சாதனை என்று கூறப்படுகின்றது. 600 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், அடுத்து 1000 பிரதிகள் அச்சிடும் வேலைகள் நடப்பதாகவும் பதிப்பாளர் வேடியப்பன் கூறியுள்ளார். 

ஈழப்போரில் சிறுவர்களின் உலகம் எப்படி இருந்தது என்பதை இந்த நாவல் பேசுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. 

2019ஆம் ஆண்டின் சென்னை புத்தக கண்காட்சியில் இனி வரும் நாட்களிலேயே சூடு பிடிக்கும். இந்த நிலையில், நடுகல் நாவல் பெரும் விற்பனை சாதனையை எட்டும் என்றும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.