ஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்!

0

திருகோணமலை சண்முகா மகளிர் பாடசாலை ஹபாயா பிரச்சினையின் மனித உரிமை ஆணைக்குழுவில் நியாயத்தை கூறிய எனது ,உயிரியல் பாட ஆசானும் கிழக்கு மாகாண வலய கல்விப்பணிப்பாளரான திரு.மன்சூர் அவர்களின் கருத்துகள்!

ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: !!

கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் எரிச்சலையும் மனித உரிமை அமைப்புகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
.
திருகோணமலை ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளோடு முஸ்லிம் மதவாத அமைப்புக்கள் கடுமையாக போராடிக்கொண்டிருந்தது. . அச்சந்தர்ப்பத்தில் மன்ஸூர் சேர் கல்விப்பணிப்பாளராக வந்தது எங்களுக்கு ஒரு ஆர்வத்தைத் தந்தது.

மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்காக மன்ஸூர் சேர் வந்திருந்தார். .

அவர் அங்கு கூறியதாவது “முஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்துதான் கல்வி கற்றார்கள். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். நானும் எனது தம்பியும் க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும் இந்துக் கலாச்சாரத்தையே படித்தோம்” என்று ஆரம்பித்த மன்சூர் அத்தோடு நிறுத்தவில்லை.

“கிழக்கின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு ஹபாயாவும் ஒரு காரணம்” என்று அவர் கூறியபோது, மனித உரிமை ஆணையகத்தில் இருந்தவர்களுக்கு தெளிவு பிறந்தது.

“எப்படி கல்வி வளர்ச்சிக்கு ஹபாயா தடையாக இருக்கிறது?’’ என்று கேட்டார் விசாரித்தவர்.

“உங்களுக்குத் தெரியாதா. மும்பாய் என்ற ஒரு படம் வந்ததே. அதில் மனிஷா கொய்ராலா கறுத்த ஆடையை அணிந்து கொண்டு அப்படியும் இப்படியும் கையை ஆட்டிக் கொண்டு வருவாளே. அப்படி இந்த ஆசிரியைகள் வரும் போது மாணவர்கள் பயப்படுகிறார்கள்’’ என்றார் மன்சூர்.
.

மன்சூர் சேர் எவ்வளவு தூரம் ஹபாயாவை உண்மைதன்மையை தமது அனுபவத்தினூடாக அறிந்தார் என்பது எங்களுக்கு அன்றுதான் புரிந்தது. “ஹபாயா விடயத்தில் தமிழர்கள் இசைந்தாலும் மன்சூர் சேர்ஷாவிடமாட்டார்” என்று அன்றே நாங்கள் நினைத்துவிட்டோம்.

‘’எனக்கு இந்த ஆசிரியைகளை மேலதிக ஆசிரியைகள் என்று காட்டி, வேறு பாடசாலைகளுக்கு அனுப்புவது பெரிய வேலை அல்ல’’ என்று, அன்று விசாரணையிலேயே மன்ஸூர் கூறினார். அப்படியே இன்று செய்திருக்கிறார்.நன்றி சேர்.

இறுதியாக வெளியே வரும்போது ஆசிரியர்களைப் பார்த்து; ‘’போங்கள். ஷண்முகாக்குப் போய் மீண்டும் பட்டுக்கொண்டு வாருங்கள்’’ என்று மன்ஸுர் ஆசான் கூறினார்.

பின்னர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர் கையெழுத்திட்டு கடிதம் எழுதினார். “இந்த ஆசிரியைகள் அப்பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கும் பொழுது, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பிரச்சினைகள் உருவாகும். அவர்கள் அப்பாடசாலையின் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்லவில்லை” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.