அதிரடிப்படையிடம் சிக்கிய மற்றுமோர் பாதாள உலககுழு உறுப்பினர்!

0

பாதாள உலக குழுவின் உறுப்பினரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான “அல ரஞ்சி” வாழைத்தோட்டத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிரப்படையால் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதுடைய அல ரஞ்சி என்று அறியப்படும் ரஞ்சித் திலகரத்ன என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளதுடன், அவரிடமிருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுகின்ற கெசல்வத்த தினுக என்பவரின் மாமனார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலவந்தமாக பணம் பெற்றுக் கொண்ட பல சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.

மாகந்துரே மதூஸ் கைதானதை தொடர்ந்து அவரது சகாக்களும் முக்கிய பெரும் புள்ளிகளும் தொடர்ந்து கைதாவதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.