அநுராதபுரத்தில் விடுதலைப்புலிகளின் தொப்பி மற்றும் வெடி பொருட்கள்!

0

அனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் மையத்தின் அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி மற்றும் வெடிமருந்துங்கள் சிக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இரகசியமான முறையில் குறித்த பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர், இவ்வாறு குப்பை கூளத்தில் வீசி சென்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அனுராதபுர காவற்துறை நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுர நகர சபை சுகாதார நிர்வாகி ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, காவற்துறை அதிகாரிகள் அங்கு சென்று மீட்கப்பட்ட பொருட்களை விசாரணைக்காக அனுராதபுரம் காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.