அன்று கடத்திய ஈபிடிபி சந்திரகுமார், இன்று போராட்டக்களத்தில் போலிவேடம்! இனி மகிந்தவும் வருவான்!

0

அப்போது எமது உறவுகளைக் கடத்திக் காணாமல் ஆக்கக் காரணமாய் இருந்தவர்கள் இப்போது நீலிக்கண்ணீர் வடித்த பாவனையை மக்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

அப்போது எமது உறவுகளைக் கடத்திக் காணாமல் போகக் காரணமாய் இருந்தவர்கள் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் என காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான உறவுகளின் போராட்டத்தில் ஒலித்த குரல்கள்.
இராணுவத்தாலும் அதனோடு சேர்ந்தியங்கிய இராணுவ ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தருமாறு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் இன்று காலை நடைபெற்றது.


இப்போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், ‘அப்போது எமது உறவுகளைக் கடத்திக் காணாமல் ஆக்கக் காரணமாய் இருந்தவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர் மறப்போமா நாம், இராணுவ ஒட்டுக்குழுக்களே உங்களால் கடத்தப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?, அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்குப் பதில் கூறு! நீதியை வழங்கு, எமாற்றாதே ஏமாற்றாதே ஐ.நாவே பதில் சொல், அரச படைகளாலும் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்ட எமது உறவுகளை ஒழித்து வைத்திருக்கும் இரகசிய தடுப்பு முகாம்களிலிருந்து உறவுகளை விடுதலை செய்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டும் ஒலிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தமது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.


காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான போராட்டத்தில், யுத்த காலம், மகிந்த ராஜபக்ச அடாவடி ஆட்சிக் காலத்தில் ஒட்டுக்குழுவாகச் செயற்பட்டு பலரைக் கடத்திக் காணாமல் போகக் காரணமாய் இருந்தவர்கள் என எல்.எல்.ஆர்.சீ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஈ.பி.டி.பி சந்திரகுமார் அணியினரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்குத் தாமும் ஆதரவு எனத் தெரிவித்துக் கலந்துகொண்டிருந்தனர். இதனைக் கண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், எமது உறவுகள் காணாமல் ஆக்கப்படக் காரணமாய் இருந்தவர்களும் இப்போது எமது போராட்டத்தில் கலந்துகொண்டு நல்லவர்கள் போல் நடித்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் என ஆதங்கப்பட்டுக்கொண்டனர்.


யுத்த காலம், மகிந்த ராஜபக்ச அடாவடி ஆட்சிக் காலத்தில் பலர் கடத்தப்படவும் காணாமல் ஆக்கப்படவும் துணை புரிந்த ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சந்திரகுமார் அணியினர் போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சிலருடன் முரண்பட்டு போராட்டத்தைத் தாமே ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறி குழப்பம் விளைவித்தனர் இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கும் சந்திரகுமார் அடாவடி ஒட்டுக்குழு அணியினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஈ.பி.டி.பி சந்திரகுமார் ஒட்டுக்குழு அணியினரால் கிளிநொச்சி ஏ-9 வீதியில், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் மக்கள் கொல்லப்படவில்லை, காணாமல் ஆக்கப்படவுமில்லை, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிப் பயங்கரவாதிகள் எனக்கூறி ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக மக்கள் சிலரை ஏமாற்றிக் கூட்டிவந்து போராட்டம் நடத்தியிருந்தமையும் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினரைக் கண்டறியும் போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தைக் குழப்ப முற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சந்திரகுமார் அணியினர் இன்று

சந்திரகுமார் அணியினர் அன்று 2012 இல்

Leave A Reply

Your email address will not be published.