அன்று தினமும் 8 அழகிகளுடன் உல்லாசம் ! இன்று கூலி தொழிலாளி ! வசதி வந்தால் ஆடாதே என்பதற்கு சிறந்த உதாரணம்

0

அதிர்ஷ்ட லாபச் சீட்டு மூலம் மில்லியன்களை அள்ளிய பிரித்தானியர் இன்று மொத்த செல்வத்தையும் இழந்து கூலி வேலை செய்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் நார்ஃபோக் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் கரோல் என்பவருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு லொட்டறியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பரிசு விழுந்தது.

35 வயதாகும் கரோல் என்பவர் தன்னிடம் இருந்த 4 பவுண்டுகளுக்கு வாங்கிய லொட்டறியில் எதிர்பாராத வகையில் பணமழை கொட்டியது.

அப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது காதலி சாண்ட்ராவை 2003 ஆம் ஆண்டு கரோல் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திடீரென்று கொட்டிய அதிர்ஷ்டத்தால் தடுமாறிப் போன கரோலின் நடவடிக்கை பிடிக்காமல் லொட்டறி பணத்தில் 1.4 மில்லியன் பவுண்டுகளை ஜீவனாம்சமாக பெற்றுக்கொண்டு சாண்ட்ரா பிரிந்து விட்டார்.

அதன்பின்னரே கரோலின் வாழ்க்கை தாறுமாறாக மாறியது. நார்ஃபோக்கில் அமைந்துள்ள இவரது 5 படுக்கை அறை கொண்ட குடியிருப்பு பாலியல் விடுதியாக மாறியது.

ஒருநாளில் 8 அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கும் அளவுக்கு அவரது இரவுகள் நீண்டுள்ளன.

அத்தோடு இதுவரை தாம் 4,000 பெண்களுடன் படுக்கை பங்கிட்டதாகவும் கரோல் கூறியுள்ளார்.

மாதம் ஒருமுறை அழகிகளை அழைத்து பாலியல் கொண்டாட்டங்களை நடத்தியுள்ளார். இதற்கு சுமார் 50,000 பவுண்டுகள் வரை செலவிட்டுள்ளார்.

மேலும் கோகோயின் போதை மருந்துக்காக நாள் ஒன்றுக்கு 2,000 பவுண்டுகள் செலவிட்டதாகவும், இவரது 5 படுக்கை அறைகளில் இவருக்கு புதிதாக கிடைத்த நண்பர்கள் எப்போதும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதை பெருமையாக கருதியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இக் காலகட்டத்தில் சுமார் 30 முறை நீதிமன்ற விசாரணையிலும் கரோல் மாட்டிக் கொண்டுள்ளார்

2005 ஆம் ஆண்டு அதிக போதையில் நார்ஃபோக் பகுதியில் உள்ள 32 கடைகளை இவர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதே ஆண்டு அவரின் வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது என்ற தகவலும் அறிவிக்கப்பட்டது.

செலவுகளை கட்டுப்படுத்த தொடங்கிய கரோல் 2012 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மொத்த பணத்தையும் இழந்து ஒருவேளை உணவுக்கு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனது 8 படுக்கை அறை கொண்ட நார்ஃபோக் இல்லத்தை வெறும் 150,000 பவுண்டுகளுக்கு விற்கும் நிலைக்கு பண நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளார்.

தற்போது மாதம் 500 பவுண்டுகள் கட்டணத்தில் 2 படுக்கை அறை கொண்ட இல்லத்தில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைக்கிறார். மணிக்கு 10 பவுண்டுகள் கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு கரி மற்றும் மரத்துண்டுகளை விநியோகம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.