அரசியலமைப்பு பேரவையில் சம்பந்தனா டக்கிளசா? இறுதி முடிவு இது தான்!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அரசியலமைப்பு சபைக்கு நியமிக்க ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தபோது, அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்தார். பின்னர், அந்த பதவிக்கு மஹிந்த ராஜபக்ச வந்தபோது, அவர் அரசியலமைப்பசபை உறுப்பினரானார்.

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் பதவியில் இருந்தபோது, அரசியலமைப்புசபைக்கு சமல் ராஜபக்சவின் பெயரை பரிந்துரைத்திருந்தார். சமல் ராஜபக்ச பின்னர் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்தார். எனினும், அண்மையில் அதிலிருந்து சமல் ராஜபக்ச விலகி விட்டார்.

அந்த வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிக்க வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் இணைந்தே அந்த நியமனத்தை வழங்க வேண்டும்.

இந்த வெற்றிடத்திற்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை மகிந்த ராஜபக்ச பரிந்துரைத்திருந்தார். எனினும், சபாநாயகர் அதை நிராகரித்தார். அந்த பரிந்துரையை பிரதமரே வழங்க வேண்டுமென அதற்கு விளக்கம் கூறினார்.

இந்தநிலையில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவை தவிர்த்து, இரா.சம்பந்தனை நியமிக்க இருவரும் இணங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.