இந்தியா பாதுகாத்த புலிகளே ராஜீவையும் 1500 இந்தியப் படைகளையும் கொன்றனர்

0

இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

image-15.png?zoom=1.2100000262260437&res

இந்தியாவின் பெங்களுரில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, ஆனாலும் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சுய நலன்களுக்காக செயற்பட்ட சிலரினால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, 1980களிலும் 2014இலும் இந்தியா இலங்கை உறவு முறிவடைந்ததாகவும் கூறியுள்ளார். ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்புடன் போரிடடபோது இந்தியாவின் சினேகபூர்வ ஆதரவு காணப்பட்டதாகவும், தற்போது ஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசாங்க மாற்றங்களினால் உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்

mahi.png?zoom=1.2100000262260437&resize=


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக தன்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, சிறந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் பின்னர் தான் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள அவர் பெங்களுரில் வைத்து இந்து நாளிதழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழ்ர்களே எதிர்த்தனர் எனவும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களை திருப்தியடையச் செய்யலாம் என்ற போதிலும் அரசியல்வாதிகள் திருப்தியடையமாட்டார்கள் எனவும் அதுவே தனது பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.