இன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர்? மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்

0

இன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர்? மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்

சில நாட்களுக்கு முன்பு செல்போன் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவகுமார். தற்போது மீண்டும் அதே சம்பவத்தை செய்து இணையத்தளத்தில் டிரெண்டாகி வருகிறார்.

செல்போன் என்றாலே சிலருக்கு அலர்ஜி. ஒரு நாளாவது செல்போன் இல்லாமல் இருக்கமாட்டோமா என தெரிச்சு ஓடும் கட்டத்தில் இவரைப் பார்த்தால் மட்டும் செல்போன் தான் தெரிச்சு ஓடும். அந்த அளவிற்கு செல்போன்களில் வில்லன் இவர்.

மீண்டும் செல்போன் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்

2.0விற்கு ஒரு பக்‌ஷி ராஜன் போல், செல்பி பிரியர்களுக்கு நடிகர் சிவகுமாரே வில்லன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகுமாருடன் செல்பி எடுக்க ஆசையாக வந்தார் இளைஞர். அதைப் பார்த்ததும் எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியாது. யோகா பயிற்சியே தோற்றுப்போகும் அளவிற்கு வந்த கோவத்தில் வெறித்தனமாக செல்போனை தட்டிவிட்டார்.

பின்னர் அது இணையத்தில் வைரலாக, எல்லோரும் சிவகுமாரை விமர்சிக்கத் தொடங்கினர். அதன் பிறகு விளக்கம் அளித்த சிவகுமார், புதிய செல்போனையும் அந்த இளைஞருக்கு வாங்கிக் கொடுத்தார்.

அத்துடன் அந்தச் சம்பவம் முடிந்தது, இனி அவர் உஷாராக இருப்பார் என்று நினைத்தால், “எல்லாக் கோட்டையும் அழிங்க நான் முதலில் இருந்து சாப்பிடுறேன்” என்பது போல அதே சம்பவத்தை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகுமாருடன் செல்பி எடுக்க ஒருவர் முயற்சித்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தட்டிவிடுவதாக நினைத்து அவர் செல்போனை பறக்க வைத்த காட்சி வீடியோவாக பதிவானது. தற்போது அது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் இன்னும் இவர் எத்தனை செல்போன் தான் தட்டிவிடுவார் என்று விமர்சனங்களைத் தொடங்கிவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.