இலக்குகளை குறிவைத்து தாக்கிய போர் விமானங்கள்!!!

0

இந்திய விமானப்படை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் முழு அளவிலான போர் பயிற்சி ஈடுபடும்.

இந்த பயிற்சியின் போது ஆகாஷ் ஏவுகணைகளை வீசுதல், ஹெலிகாப்டரிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது, மிக்-29 விமானத்திலிருந்து தரை இலக்குகளை தாக்குவது போன்றவற்றை மேற்கொள்ளப்படும். விமானப்படையின் திறனை ஆய்வு பரிசோதனை செய்துக்கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

வாயு சக்தி 2019 பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று நடைபெற்றது. பகல்-இரவு பயிற்சியாக இது நடைபெற்றது. இந்த பயிற்சியில் விமானப்படையின் 140 போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. பகலிலும், இரவிலும் இலக்குகளை குறிவைத்து சரியாக தாக்குதல் நடத்தின. இந்த பயிற்சியில் முதல் முறையாக ஏ.எல்.எச். (ஹெலிகாப்டர்) மற்றும் ஆகாஷ்  ஏவுகணை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த பயிற்சியை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை மார்ஷல் தனோனா, பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பார்வையிட்டனர். 

Leave A Reply

Your email address will not be published.