இலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் ! அதிர்ச்சி செய்தி

0

169 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ஜி.டபள்யு.சி. பிரபாசினி தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபர ஆய்வின் படி 2018 ஆம் ஆண்டில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வறிக்கையில் ஊவா மாகாணததின் பண்டாரவளைப் பகுதியில் 52 சிறார்களும், பதுளைப் பகுதியில் 24 சிறார்களும், மகியங்கனைப் பகுதியில் 28 சிறார்களும், மொனராகலைப் பகுதியில் 41 சிறார்களும், வெள்ளவாயாப் பகுதியில் 24 சிறார்களுமாக 169 குறைந்த வயதையுடையவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி துஸ்பிரயோகங்கள் குறித்து மேற்குறிப்பிட்ட இடங்களின் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மேலும் குறித்த துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பெற்றோருக்கு கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினர்களுக்கும் தனித் தனியாக விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.