இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறும் ஈழத்தவர்கள்!

0

இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதைகள், ஆட்கடத்தல் காரணமாக போலி கடவுட்டுச்சீட்டுகள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான sky செய்தி நிறுவனம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்று பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ள சிலருடனான நேர்காணலையடுத்தே குறித்த நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் இவ்வாறு இலங்கையிலிருந்து போலி கடவுட்டுச்சீட்டுகள் மூலம் வெளிநாடுகள் சென்று அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாமல் கடும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இவர்களில் சிலருக்கு ஆலயங்களும், தொண்டு நிறுவனங்களும் தங்குவதற்கு இடம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்பவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது எனவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.