இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர் !

0

இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பத்தை சிறைச்சாலை
திணைக்களம் கோரியுள்ள நிலையில் இந்த பதவிக்காக அமெரிக்க நாட்டவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒருவரையும் தனக்கு தெரியாதெனவும், இந்த தொழிலுக்கு தான் அதிக விருப்பத்துடன் உள்ளதாகவும் குறித்த அமெரிக்க நாட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணி தனக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக குறித்த அமெரிக்க நாட்டவர், சிறைச்சாலை திணைக்கள மின்னஞ்சலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பதவிக்காக இலங்கையர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பதிலாக தன்னை தெரிவு செய்வது மிகவும் பொருத்தமானது என குறித்த நபர் தனது விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.