உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா ? இல்லையா? கைரேகை ஜோதிடம் கூறும் ரகசியம் என்ன !

0

காதல் ரேகை அல்லது திருமண ரேகை நமது உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்கு கீழே உள்ள கிடைமட்ட ரேகை ஆகும்.

இந்த இதய ரேகையைக் கொண்டு நமது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

அந்தவகையில் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா?இல்லையா? என்பதை பற்றி கைரேகை ஜோதிடம் என்ன சொல்கின்றது என்பதை பார்ப்போம்.

குறுகிய காதல் ரேகை

இதய ரேகையின் நீளம் சிறியதாக இருந்தால் அதாவது அதன் நீளம் நடுவிரல் வரை மட்டும் நீடித்து இருந்தால் அவர்கள் சுயநலமிக்கவர்களாகவும், இரக்கமற்ற, குறுகிய மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

இதனால் உறவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க மாட்டீர்கள். இதனால் உங்கள் காதல் வாழ்க்கை சுமூகமாக செல்லாது. தனியாக இருக்க நேரிடும்.

நீண்ட காதல் ரேகை

உங்கள் காதல் மிக நீளமாக அதாவது உள்ளங்கையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நீடித்து இருந்தால் நீங்கள் முகத்திற்கு நேரே நேரடியாக பேசக் கூடிய நபர்கள்.காதல் வாழ்க்கையில் குறுக்குவழியை வெறுப்பீர்கள்.

இயற்கையாகவே காதல் ததும்பும் பேர்வழிகள் நீங்கள். ஆனால் அது தான் உங்கள் பலவீனமே. உறவில் விரிசல் ஏற்படும் போது அதை உங்களால் தாங்க இயலாது. இதயம் நொறுங்கிப் போய் விடுவீர்கள்.உறவில் ரெம்ப உண்மையாகவும் இருப்பீர்கள்.

காதல் ரேகை வியாழன் மேட்டில் அமைந்தால்

உங்கள் காதல் ரேகை வியாழன் மேடு வரை நீண்டு இருந்தால் நீங்கள் காதல் கனவு, நிறைய எதிர்ப்பார்ப்புகள் கொண்ட பேர்வழிகளாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது உங்கள் நினைப்பாக இருக்கும்.

காதல் ரேகை வியாழன் மேட்டிற்கு இடையில் சனி மேட்டில் இருந்தால் காதல் ரேகை வியாழன் மற்றும் சனி மேட்டிற்கு இடையில் அமைந்து இருந்தால் உண்மையான காதல் மற்றும் அன்பு கொண்டு இருப்பீர்கள். காதல் உறவில் உங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவீர்கள்.

காதல் ரேகையில் பிளவு
காதல் ரேகையின் நுனியில் மூன்று பிளவுகள் காணப்பட்டால் நீங்கள் அமைதியை விரும்பும் நபர்கள். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கை வழக்கத்தை விட கொஞ்சம் கடினமாகவே அமையும்.

காதல் ரேகையில் அதிக பிளவு

உங்கள் காதல் ரேகையின் நுனியில் அதிக பிளவு தென்பட்டால் நீங்கள் ஒரு உண்மையான காதல் வாழ்க்கையை பெற முடியும். எப்பொழுதும் காதலில் மாறாமல் இருப்பீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.