ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…! பிரமிப்பில் மருத்துவ உலகம்

0

ஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.கிழக்கு ஈராக்கை சேந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அந்த பெண்ணிற்கு 6 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. அனைத்து குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. அந்த பெண்ணும் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது 7 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.