காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் முடங்கியது வட தமிழீழம்!

0

25.02.2019 இன்று கிளிநொச்சியில் வடக்கு.கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளின் முடிவுக்கு நீதிவேண்டியும். சர்வதேசம் ஸ்ரீலங்காவுக்கு காலக்கெடு கொடுக்கக்கூடாது என்றும் மாபெரும் கவணயீர்ப்புபோராட்டம் கிளிநொச்சி கந்தசாமி கோவில்முன்றலில் ஆரம்பமாகி கிளிநொச்சி டிப்போச்சந்தியை நோக்கி நகர்கின்றது…

வட தமிழீழம் இன்று விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பினால் வடக்கு முற்றாக முடங்கிப்போயுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இரண்டு வருடத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதேவேளை இன்றைய தினம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் நீதி கோரி பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்படும் இதேவேளை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்படுகிறது.

பாடசாலைகள்,யாழ்.பல்கலைக்கழகம்,அரச திணைக்களங்கள்,வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தைகள் என அனைத்தும் இழுத்து மூடப்பட்டிருந்தது.மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடியிருந்தன.இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்துகளோ தனியார் பேரூந்துகளோ சேவையிலீடுபடவில்லை.

நீண்ட இடைவெளியின் பின்னராக வடக்கு முற்றாக முடங்கியதொரு கடையடைப்பு போராட்டம் இம்முறை வடக்கில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.