காணாமல் ஆக்கப்பட்ட மகளை இறுதி வரை காணாமலே உயிர்நீத்த 3 மாவீரர்களின் தாய் ! மனதை உலுக்கும் செய்தி

0

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடியலைந்த மூன்று மாவீரர்களின் தாயார் மரணமடைந்துள்ளார்.

மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா என்பவரே மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரான இவர் போராளியாக தடுப்பு முகாமிலிருந்து மீண்டு வந்த நிலையில் காணமலாக்கப்பட்ட தனது மகளைத் தேடியலைந்தார்.

மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.