காதலர் தினத்தில் மனைவியின் இதயத்தை தானமாக வழங்கிய கணவர்! இறந்தும் உயிர் வாழும் உண்மைக்காதல்

0

வேலூரில் நபர் ஒருவர் காதலர் தினத்தில் தனது மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளது மிகவும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம்ராஜ் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோகிலா என்ற பெண்மணிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கோகிலா கர்ப்பமாக இருந்துள்ளார். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த கோகிலா கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

இருப்பினும், கோகிலாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படாமல் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதனால் சோகத்தில் ஆழ்ந்த கணவர் கவுதம்ராஜ், தனது மனைவியின் இதயம் , சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களை இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தானமாக வழங்கியுள்ளார்.

அதுவும், முக்கியமாக எனது மனைவியின் இதயம் யாரேனும் நபருக்கு பொருத்த வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டு, இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவியின் இதயத்தை தானமாக வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.