”காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்த பெண்ணை கைது செய்யவேண்டும்” யார் அந்தப் பெண்?

0

– திருமாவளவன்

Image

மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய இந்து மகா சபையை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்துள்ள பரமன்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், காந்தியடிகளின் நினைவு நாளன்று உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் என்ற பெண் காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்த பெண்ணை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்ற அவர், இந்த இயக்கங்களை தடை செய்யவேண்டும் என்றார். மேலும் கூறுகையில், அரசு ஊழியர்களின் போராட்டத்தை அச்சுறுத்தல் மூலம் நசுக்கியுள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டிய திருமாவளவன் இதற்கு திரளாக மக்கள் கிளர்ந்து எழுந்து போராட வேண்டிய கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார். 

இடைத்தேர்தலை நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன் நடத்த வாய்ப்பில்லை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் இணைந்து நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது. கார்ப்ரேட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவே அரசுகள் செயல்படுகிறது அந்த அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் விவகாரம் அணுகப்படுகிறது  என்றார். 

காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்ட பெண் யார்? பின்னணித் தகவல்

தமிழ்ப்பிரபாFollow

காந்தி இறந்த நாளான நேற்று, அவருடைய உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. அவருடைய செயலுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியதால், பூஜா சாகுன் பாண்டே உட்பட,  13 பேர்மீது உத்தரப்பிரதேச அலிகார்க் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவரை மட்டும் கைதுசெய்திருக்கிறார்கள். 

காந்தி உருவப்படத்தை சுடும் இந்து மகாசபை தலைவி

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை கணிதம் மற்றும் கணினித் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பூஜா பாண்டேவைப் பற்றி சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், அகில பாரதிய ஹிந்து மகா சபா இந்துக்களான நீதிமன்றத்தைக் கடந்த ஆண்டு உருவாக்கியது. போன சுதந்திர தினத்தன்று, நீதிமன்றத் தொடக்க விழாவை நடத்தி, அதன் நீதிபதியாக பூஜா பாண்டேவை நியமித்திருக்கிறார்கள்.

காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்ட

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பூஜா சாகுன் பாண்டே, நீதிபதியாகப் பதவியேற்றுப் பேசுகையில், “இந்துப் பெண்களுக்கு நடக்கும் வன்முறை, இந்துத் திருமணத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் இந்து மக்கள் தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, எங்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். தண்டனைக்கான சிறைச்சாலைகளை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். அதிகபட்சமாக மரண தண்டனை வரை எங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார். நீதிமன்ற உருவாக்கப் பணிகளில் இருந்த பூஜா பாண்டே, காந்தியின் உருவப்படத்தைத் துப்பாகியால் சுட்ட வழக்கில் நேற்றிலிருந்து காவலர்களால் தேடப்பட்டுவருவது, இந்து மகா சபை உறுப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave A Reply

Your email address will not be published.