கிறிஸ்டின் மருமகன், முஸ்லீம் மருமகள்… டி.ராஜேந்தரின் டண்டணக்கா பேமிலி!

0

மும்மதமும் சம்மதம் என்ற நிலைப்பாடுடன், தனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் சினிமா கம்பெனியின் லோகோவை, மூன்று மதங்களின் குறியீடுகளுடன் வடிவமைத்தவர் டி.ராஜேந்தர்.  அதற்கு ஏற்றார்போல், தனது குடும்பத்தையும் மும்மதமும் சம்மதம் என  இன்று மனதார ஏற்றுக் கொண்டார். 

டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷாவும் தீவிர இந்து மத பற்றாளர்கள். அதேசமயம் அவர்களது மகள் இலக்கியாவுக்கு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரை மணமகனாக ஆக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால்ம, உஷாவும், இலக்கியாவும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். பின்னர் இலக்கியாவின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியே  நடைபெற்றது.

அதேபோல், தற்போது அவர்களது இளைய மகன் குறளரசன், முஸ்லீம் பெண் ஒருவரை மணக்க இருக்கிறாராம். அதனால், முறைப்படி அவர் முஸ்லீம் மதகுரு முன்பு, கலிமா சொல்லி இஸ்லாத்துக்கு மாறினார். இந்த நிகழ்ச்சியில் ராஜேந்தரும், உஷாவும்  கலந்து கொண்டனர். விரைவில் குறளரசனுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமண ஏற்பாடுகளும் நடைபெற உள்ளதாக தகவல். 

இன்றைய காலத்தில் மதரீதியாக ஆணவக் கொலைகள் நடைபெறும் நிலையில், தனது மகனும், மகளும் மதம் மாறிய நிலையில், அதை ஏகமனதுடன் ஏற்றுக் கொண்ட டி.ராஜேந்தர் வித்தியாசமானவர்தான்.

அதெல்லாம் சரி,  ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் வழிதான்  தனி வழியாச்சே. அவர் இதைவிட எதாவது சிறப்பாக செய்வார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Leave A Reply

Your email address will not be published.