கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் மாபெரும் பேரணி! ஏ 9 வீதி ஸ்தம்பிதம்!

0

கிளிநொச்சியில் இன்று (25) காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம், தொடர்ச்சியாக பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து சென்றது.

இந்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த பேரணி காரணமாக ஏ9 வீதி ஊடான போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பிதமடைந்தது.

இதையடுத்து, பேரணியின் நகர்விற்கு ஏற்க, மாற்று பாதையூடான போக்குவரத்து ஒழுங்குகளை பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.