கிளிநொச்சி பேரணியில் குழப்பம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை! சிறிதரன் உறுதி!

0

நேற்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெற்றவேளை அதில் “கறுப்புச்சட்டை“ குழுவொன்று குழப்பத்தில் ஈடுபட்டது.

அவர்கள் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

அந்த குழப்பங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில், முழுமையாக ஆராய்ந்து பார்த்து தவறுகள் இனிமேல் இடம்பெறாத வகையில் நடவடிக்கையெடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

பேரணியின் பின்பகுதியில் நின்றதால், முன்பகுதியில் நடந்த சம்பவங்கள் எதையும் அறிந்திருக்கவில்லையென்றும், உணர்வுபூர்வமான மக்கள் போராட்டங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை தான் விரும்புவதில்லையென்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி போராட்டத்தின் பின்னர், தொடர்ந்து பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்டு வருவதால், அந்த சம்பவம் குறித்த செய்திகளையும், வீடியோக்களையும் இனிமேல்தான் பார்க்க வேண்டும், தமது கட்சியை சார்ந்த யாராவது அதில் சம்பந்தப்பட்டார்களா என்பதை அதன் பின்னர்தான் உறுதிசெய்யலாம் எனவும் தமது கட்சியை சார்ந்தவர்களும் இந்த குழப்பத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் இப்படியான குழப்பங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.