கோப்பாப்புலவு போராட்டத்தை திசை திருப்ப சதி நடவடிக்கை!

0

கோப்பாப்புலவில் போராடி வரும் மக்களை நேற்று முன்தினம் (26) வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் சந்தித்து பேசிய பின்னர் , போராட்டக்காரர்களில் சிலர் தமக்குரிய நட்ட ஈட்டை பெற்று தருமாறு தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு நச்சரித்து வருகிறார்கள் என்று, மக்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மக்களில் ஒரு பகுதியினர், யாருடைதோ பின்னணியில் இயங்குகிறார்கள். எமது காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டாம், பதிலாக நட்டஈடு தந்தாலே போதுமென திடீரென குழப்பத்தில் ஈடுபடுகின்றனர் என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விசனம் வௌியிட்டுள்ளனர்.

காணிகளை விடுவிக்க கோரி தம்முடன் போராட்டக்களத்தில் இணைந்திருக்கும் அவர்கள், போராட்டக்களத்தில் யாராவது பிரமுகர்கள் வரும்போது திடீரென நட்டஈட்டு கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்தனர்.

இதனமூலம், நட்டஈட்டுக்காக நடக்கும் போராட்டமாக திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.