தமிழரின் தலையை வெட்டிய சிங்கள இராணுவம்!

0

விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட இராணுவ முகாம் ஒன்றில் மீட்கப்பட்ட புகைப்படமே இது. இப்புகைப்படம் ஏற்கனவே ஈழநாதம் வாரஇதழில் வெளிவந்திருந்தது. வீடு பார்க்கப்போனவர்கள், தேங்காய் பிடுங்கப்போனவர்கள் என இன்று வரை திரும்பி வராமல் இருப்பவர்கள் பலர். இராணுவத்தின் பிடிக்கும் சிக்கி தப்பி வந்தவர்களும் இருக்கிறரர்கள். இது இறுதி யுத்தகாலப்பகுதியில் நடந்த கதை அல்ல. சிறிலங்கா படையினர் சத்ஜெய நடவடிக்கை மூலம் கிளிநொச்சியைக்கைப்பற்றி இருந்தனர். கிளிநொச்சி அண்டிய பிரதேசங்களில் வீடுபார்க்க அல்லது தங்கள் காணிகளில் உள்ள வருவாய்களை பெறுவதற்கு செல்வது வழமை. இவ்வாறு செல்பவர்களில் பலர் இராணுவத்தின் பிடிக்குள் சிக்கிவிடுவர். இதில் சிலரே தப்பி வந்திருக்கிறார்கள். 

“அவருடைய பெயர் திருநாவுக்கரசு. எள்ளுக்காட்டில் வசித்து வந்தவர். தற்பொழுது இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. இராணுவத்தின் பிடிக்குள் அகப்பட்டு இராணுவத்தினரால் மலசல கிடங்கிக்குள் இறக்கிவிட்டு சுடப்பட்ட மூவரில் ஒருவர். மற்றயவர்கள் யார் என்றே அவருக்கும் தெரியவில்லை..

இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரத்தில் வசித்து வந்த திருநாவுக்கரசு எள்ளுக்காட்டில் உள்ள தனது வீட்டினை பார்க்க சென்றிருக்கிறார். வீட்டில் நின்றபோதே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பின்னர் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் அமைந்திருந்த முகாமிற்கு கொண்டு சென்று சித்திரவதை ஆளாக்கப்பட்டார். அன்று மாலையே அருகிலுள்ள ஆசிரியரின் வீட்டில் உள்ள மலசலசல கிடங்கிக்குள் அவரோடு மேலும் இருவரையும் இறக்கிவிட்டு சுடப்பட்டிருந்தனர். திருநாவுக்கரசு காயங்களுடன் மயங்கிவிட்டார். மயக்கம் தெளிந்து எழும்பிய போது மற்றய இருவரும் இறந்து விட்டார்களாம். படையினர் சென்ற பின்னர். மூன்று நாட்களின் பின்னரே அக்கிடங்கினில் இருந்து வெளியே வந்திருந்தார். அவரால் நடக்கமுடியாத நிலை. காலில் காயம். வீதிகரையோரமாக ஊர்ந்து ஊர்ந்து சென்று உருத்திரபுரம் கூழாவடிக்கு அருகாமையில் மக்களால் காப்பாற்றப்பட்டு அக்கராயன் வைத்தியசாலையில் அனுப்பட்டிருந்தார்.

-சுரேன் கார்த்திகேசு

இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கண்ணீர் எனக்கு பழைய நினைவுகளை விட்டு செல்கிறது. காணாமல் போனவர்கள் மீளவும் வரவேண்டும் அல்லது அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்று கூட தெரியவேண்டும். அக்குடும்பங்களின் நிம்மதிக்காக…!

Leave A Reply

Your email address will not be published.