தமிழ்நாட்டில் ஹோட்டலில் சாப்பிட வந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் !

0

ஹோட்டலில் சாப்பிட வந்த போது பெண் ஊழியர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.

கென்னட் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஆத்தா என்ற ஹோட்டலில் 2பேர் உணவு அருந்து வந்த நிலையில், அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடமும், கடையின் உரிமையாளரான மற்றொரு பெண்ணிடமும் அவர்கள் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளனர்.

அத்தோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெண்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில், எஸ்எஸ் காலணி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தணக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனை கைது செய்துள்ள நிலையில் லட்சுமணன் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.