தாக்குதல் குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம் கொடுத்த இந்தியா:

0

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவின் தற்கொலை படை தீவிரவாதி கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பாகிஸ்தானோ தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியது. மேலும் அந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இன்னும் பல தாக்குதலை நடத்த திட்டமிருப்பதே உளவுத் துறை கண்டுபிடித்தது. இதனையடுத்து இந்தியா தற்பாதுகாப்புக்காக இன்று அதிகாலையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் உள்ளிட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமான படை குண்டு வீசி அழித்தது. 

இந்திய விமான படை நடத்திய தாக்குதல் குறித்தும், அதன் அவசியத்தையும் குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் மத்திய அரசு விளக்கம் கொடுத்து வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  தொலைப்பேசியில் அமொிக்க பாதுகாப்பு துறை செயலாளர் மைக் பாம்பியோயிடம் விமான படை தாக்குதல் குறித்து விளக்கி கூறினார். மேலும், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யிடம் இது குறித்து பேசினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக தனது பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவின் சட்டப்பூர்வ உாிமையை பிரான்ஸ் அங்கீகாித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது பகுதியில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. 

நாட்டிற்காக எந்த சவாலையும் ஏற்கத் தயார்: முப்படை தளபதிகள்!

புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை எல்லைகளைக் கடந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மலை முகடு மற்றும் காடுகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், முப்படைகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்காக எந்த சவாலையும் ஏற்கத் தயார் என முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை பிரதமர் மோடி விடிய விடிய கவனித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக திரும்பிய செய்தியை கேட்ட பிறகு தான் பிரதமர் மோடி ஓய்வெடுக்க சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ஐநா சபை, அமெரிக்கா,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய விமானப்படையின் தாக்குதல் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.