தாயைக் கொலை செய்து நாய்க்கு உணவாக்கிய கொடூர மகன் !அதிர்ச்சி வாக்குமூலம் !

0

பெற்ற தாயைக் கொன்று வளர்ப்பு நாய்க்கு உணவாக்கிய மகனை பொலிசார் கைது செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஸ்பெயின் நாட்டில் அரங்கேறியுள்ளது.

தலைநகர் மாட்ரிடில் வியாழன்று குறித்த 26 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட 66 வயது தாயாரின் நண்பர் ஒருவர், கடந்த ஒருமாத காலமாக அவர் திடீரென்று மாயமானதாக கூறி பொலிசாரை அணுகியுள்ளார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அவரது குடியிருப்பை சோதனையிட்டுள்ளனர். அதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட மாமிசங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாரினால் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மட்டுமின்றி அந்த இளைஞரின் நாயை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைதான இளைஞன் மீது ஏற்கெனவே 12 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மேலும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் தனது தாயாரை தாக்கியதாகவே வழக்கு பதிவாகியுள்ளது.

இவர்களது குடியிருப்பின் அருகாமையில் உள்ள மதுபான விடுதிக்கு வாடிக்கையாக சென்றுவரும் குறித்த பெண் திடீரென்று சில வாரங்களாக காணவில்லை.

இதனைத் தொடர்ந்து நண்பர் ஒருவர் பொலிசாரிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். இதன்பேரிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.