திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் நீல நிறமாக மாறி உயிரிழந்த மணப்பெண் ! நடந்தது என்ன ?

0

திருமணமான சில மணிநேரத்தில் மணப்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த விக்டோரியா ஜெப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

42 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய ரொனால்ட் என்பவரை காதலித்த நிலையில், மகன் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு உணவருந்திய விக்டோரியா, உறங்க செல்கிறேன் என்று கூறிச்சென்றவர் அப்படியே சுயநினைவை இழந்து உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கணவன் ரொனால்ட் கூறியதாவது,

வேலை பார்க்கும் இடத்தில் அனைவரிடமும் அன்போடு பழகும் அவளின் குணம் பிடித்துப்போனமையினால் அவள் மீது காதல் கொண்டேன்.

திருமணம் முடிந்தவுடன் அவளது மகன் மற்றும் நான் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக உணவருந்தினோம்.

சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிச்சென்றாள், ஆனால் அவள் உறங்கிகொண்டிருக்கையில் அவளது உடல் நீல நிறமாக மாறியது.

இதனைத் தொடர்ந்து பதறியடித்து மருத்துவமனையில் அனுமதித்தோம். இருப்பினும் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டாள் என தெரிவித்தனர்.

அவள் நினைவுகள் எங்கும் இருப்பது போன்று உள்ளது எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.