துணைபோகிறாரா தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி!

0

முல்லைத்தீவில் தமிழர்களது நில ஆக்கிரமிப்புக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் துணைபோகின்றாரா? என்ற கேள்வியை முல்லைத்தீவு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

தமிழர்களது பூர்வீக நிலங்களை படிப்படியாக விழுங்கி புதிதாக சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு தனியான ஒரு பிரதேச செயலகமாக உருவான (மணலாறு) வெலிஓயா பிரதேச செயலக பிரிவு எவ்வாறு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது இதற்காக அபிவிருத்தி நிதிகளை அதிகமாக ஒதுக்குகிறார்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பல கூட்டங்களில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்த்து வந்தனர்

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பிரதமர் முன்னிலையில் தான் வேறு யாருக்கும் நிதி ஒதுக்காத போதும் தான் வெலிஓயா பகுதிக்கு நிதி ஒதுக்கியதாகவும் அதனை பிரதேச செயலாளர் திரும்பி செல்ல விட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களது தேவைகள் அதிகமாக காணப்படும் நிலையில் தமிழர்களது பூர்வீக நிலங்களை படிப்படியாக விழுங்கி புதிதாக சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு தனியான ஒரு பிரதேச செயலகமாக உருவான (மணலாறு) வெலிஓயா பிரதேச செயலக பிரிவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் முல்லைத்தீவில் தமிழர்களது நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு சிவமோகன் துணைபோகிறாரா? என்ற பாரிய சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.