`நான் தாத்தா இல்லம்மா, மாமா’! – எல்.கே.ஜி சிறுமியிடம் ஸ்டாலின் நகைச்சுவை!

0

‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தும் முயற்சியில் தி.மு.க இறங்கியுள்ளது. 

ஸ்டாலின்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்த ஊராட்சிசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் தயாநிதிமாறன், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களும் தி.மு.க முக்கிய நிர்வாகிகளும் தனித்தனியா ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தி.மு.க காலத்தில் செய்த சிறப்புத் திட்டங்களை தெரிவித்தும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும் வருகின்றனர். இதே கூட்டத்தில் பல சோகமான சம்பவங்களும், விமர்சனங்கள், சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. 

ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நேற்று நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாடினார். இதில் பல பெண்கள் கலந்துகொண்டு தங்களின் தேவைகளையும் குறைகளையும் ஸ்டாலினிடம் முறையிட்டனர். அப்போதும் அதே கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையும் பேசியது. சிறுமி பேசும்போது, “ஸ்டாலின் தாத்தா வணக்கம்” எனக் கூறியது. உடனடியாக குறுக்கிட்ட ஸ்டாலின் “ஸ்டாலின் தாத்தா இல்லை, ஸ்டாலின் மாமா” எனக் கூறினார். அவரின் பேச்சைக் கேட்டு அங்கிருந்த மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்து சிரித்தனர்.

2 hour’s ago

பிறகு உன் பெயர் என்ன என ஸ்டாலின் கேட்டார் அதற்கு குழந்தை மஹிதா, எல்.கே.ஜி எனக் கூற அந்தச் சிறுமிக்கு வாழ்த்துக் கூறினார் தி.மு.க தலைவர். பிறகு‘  “நான் உங்களுக்காக ஒரு பாட்டு பாடுகிறேன் எனச் சொல்லிவிட்டு, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா…” என்ற பாடலை பாடி அசத்தினார் மஹிதா. குழந்தையின் மழலை பேச்சும் ஸ்டாலின் பதிலும் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.