பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி இறுதியாக கூறியுள்ள விடயம் இது தான்!

0

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த போது, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி அபினந்தன் வர்த்தன் என்பவரைப் பாகிஸ்தான் இராணுவம் கைது செய்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தனக்கு அளித்துள்ள பாதுகாப்பு குறித்து விமானி அபினந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், விமானியிடம் பாகிஸ்தான் இராணுவத்தினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர் பதிலளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, முதலில் அவர் பெயர் என்ன உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட பாகிஸ்தான் இராணுவத்தினர், எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம் எனக் கேட்க, அதற்கு “ஆம், இங்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.

நான் இப்போது சொல்லும் கருத்துகளை இந்தியா சென்ற பிறகு மாற்றிக் கூற மாட்டேன். என்னைப் பாகிஸ்தான் இராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள்.

என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்தி வருகிறார்கள்.

இதைத்தான் இந்தியா இராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்தும் விதம் என்னை ஈர்த்துள்ளது. நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். எனக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது’’ என்றார்.

தொடர்ந்து அவரிடம், உங்கள் விமானம் என்ன; என்ன பணிக்காக வந்தீர்கள் எனப் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கேட்க அதற்குப் பதில் கூற மறுத்துவிட்டார் அபினந்தன்.

அதேவேளை அபினந்தன் வர்த்தன் குறித்த விவரங்கள் சில இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதற்கமைய அபினந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் திருப்பணவூர்தான் இவரது சொந்த ஊர். இதை அவரின் உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, முதலில் இந்திய விமானம் கீழே விழுந்ததும் அந்தப் பகுதி கிராம மக்கள் விமானி அபினந்தனை தாக்க முயன்றுள்ளனர்.

என்றாலும் பாகிஸ்தான் இராணுவத்தின் தலையீட்டில் விமானி அபினந்தன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முதலுதவி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.