பாகிஸ்தானுக்கு பதிலடி! நடிகர் சங்கம் ஆதரவு!

0

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தாக்கியதில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியானார்கள்.  

 இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த தாக்குதலுக்கு அரசு எந்த விதத்தில் பதிலடி கொடுத்தாலும், அதை நடிகர் சங்கம் வரவேற்கும் என்று தேசபக்தியுடன் தெரிவிப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.