பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இந்திய விமானி அபி நந்தன்! பரபரப்பு வீடியோ பேட்டி!!

0

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள விமானி அபி நந்தன் சென்னையை சேர்ந்தவர்; உறவினர்கள் கவலை

புதுடெல்லி: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபிநந்தனின் வீடு சென்னை சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ளது. மாடம்பாக்கத்தில் அபிநந்தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர். அபிநந்தன் தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள விமானி அபிநந்தனின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை தகர்த்தெறிந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. 

அதன் பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் விமானி அபிநந்தனை காணவில்லை என தகவல் வெளியாகியது. விமானி அபினந்தன் காணாமல் போனது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் விமானி அபினந்தன் உள்ளது உண்மைதான் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நான் பாதுகாப்பாக இருக்கிறேன். பாகிஸ்தான் இராணுவத்தினர் என்னை மரியாதையோடு நடத்துகிறார்கள். கும்பலிடமிருது அவர்களே காப்பாற்றினார்கள்.என் நாட்டின் இராணுவத்தினரும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என் நாட்டிற்கு சென்றாலும் என்னுடைய இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன். – அபிநந்தன்

Leave A Reply

Your email address will not be published.