பாராளுமன்ற உறுப்பினர்களின் கொக்கேய்ன் பாவனை விசாரணை அறிக்கை இன்று சமர்பிப்பு!

0

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று (25) பிரதமர் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இது குறித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழு கடந்த வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் விசாரணைகளை நடத்தியது.

இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றினை குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது 30 வருட அனுபவத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் கொக்கேன் பாவனையாளர் இல்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.