புலமைப்பரிசில் பரிட்சை தொடர்பில் மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு!

0

இன்று (20) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

இதன் போது , சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று ஏற்பட்டிருக்கும் பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து விரிவான சமூக கருத்தாய்வொன்று அவசியமாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்றைய சிறுவர் தலைமுறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அனைத்து துறைகளிலும் விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் , ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இதனை இரத்துச்செய்வது பற்றிய தீர்மானத்திற்கு தானும் உடன்படுவதாக தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கியமானதொரு தடை தாண்டல் அல்ல என்றும் இதன்போது பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.