புலிகள் அமைப்பில் இணைந்து போராடியிருப்பேன்! ஞானசார தேரருக்கு தோன்றிய திடீர் ஞானம்!

0

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் மனோ கணேசனிடம் பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மிகவும் உருக்கமான விடயம் ஒன்றை கூறியுள்ளார்.

நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என்று ஞானசாரர் கூறியுள்ளார்.

நான் தமிழனாக பிறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியிருப்பேன் என அவர் நெகிழ்வாக கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.