புலிக் கொடியுடன் லண்டன் இலங்கை தூதரகத்தை முடக்கிய தமிழர்கள்!

0

லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று (திங்கட்கிழமை) 71 ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரிநாளாக அனுஷ்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்தின் முன்னால், காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும்குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்று திரண்டுள்ளதுடன் பறை முழக்கங்களுடனும் புலிக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசாங்ககத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

இதேவேளை கடந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வை அடுத்து இம்முறை, லண்டனில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையின் கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது பிரித்தானியாவிலிருள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ அவர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்பாக கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பிலான வழக்கும் தற்போது வெஸ்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.