பேருந்துகளில் இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது?

0

இலங்கையில் ஓடும் அரச தனியார் போக்குவரத்து பேருந்துகளில் இனிவரும் காலத்தில் அனுமதியளிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் காணொளிகளையே ஒலிபரப்பவும் ஒளிபரப்பவும் முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அனுமதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்மூலம் கிடைக்கப்பெறும் என்றும் அவ்வாறு அனுமதிக்கு உள்ளான பாடல்களையும் காணொளிகளையும் மட்டுமே பேருந்துகளில் ஒலி-ஒளிபரபமுடியும் என்று அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரச பேருந்துகளில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் கேட்பதற்கு உகந்தவையாக இல்லையென்றும் அதிக வாத்தியங்கள் கலந்து அதிக ஒலியில் ஒலிபரப்பப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுவருவதான முறைப்பாடுகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுவருகிறது.

அதைவிட சிலவேளைகளில் பிள்ளைகளுடன் குடும்பமாக பயணிக்கின்றபோது பார்ப்பதற்கு தகாத காணொளிகள் ஒளிபரப்பப்படுவதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரமே இந்த உடனடி நடவடிக்கையினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.