போதைப்பொருள் கடத்தல் ! டுபாயில் கைதாகிய முக்கிய புள்ளி! மூடி மறைக்கின்றதா அரசு ?

0

பாதாள உலக குழுத்தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியது.

எனினும் கைது சம்பவத்தை டுபாய் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகந்துரே மதூஸ் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“இதுதொடர்பிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைககள் வெற்றியளிக்கும் பட்சத்தில், டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுத்தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஸ் டுபாயிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

அவருடன் நான்கு பாதாள உலக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.