போதைப்பொருள் கடத்தல் ! 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவு?

0

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 பேரில் நால்வர் வௌிநாட்டுப் பிரஜைகள் என்பதால், ஏனைய 13 பேருக்கு மாத்திரமே மரணதண்டனையை நிறைவேற்ற முடியும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றவாளிகளின் பட்டியலில் 4 பாகிஸ்தானிய பிரஜைகளின் பெயர்களும் அடங்கியுள்ளன.

குறித்த நால்வரையும் விடுவிக்குமாறு பாகிஸ்தானிய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 பேரின் பெயர்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல், அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அனைத்து குற்றவாளிகளும் 50 க்கும் குறைவான வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.