மன்னார் மனித புதைகுழி காபன் அறிக்கையில் மேலும் தடங்கல்கள்!

0

மன்னார் நுழைவாயிலின் சதொச வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளின் காபன் அறிக்கை மேலும் தாமதமாகும் என காணாமல் போனவர்களிற்கான பணியகம் தெரிவித்துள்ளது.

மனித புதைகுழியின் 6 மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா நிறுவனத்திற்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதில் ஐந்து மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை பீட்டா இணையத்தளத்தில் இருந்து, புதைகுழி அகழ்வு பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச பெற்றிருந்தார்.

பீட்டா நிறுவனத்தின் இணையத்திலிருந்து பெறப்பட்ட காபன் அறிக்கையை, மன்னார் நீதிவான் நீதிமன்ற பதிவாளரிடம், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச ஒப்படைத்துள்ளார்.

எனினும், உத்தியோகபூர்வமாக அறிக்கை அனுப்பிவைக்கப்படும் போதே வெளியிடும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆறாவது மாதிரியின் பரிசோதனைக்கான மூலப்பொருட்கள் இன்மையால் பரிசோதனை தாமதமடைந்துள்ளது.

மூலப்பொருட்களை பெற்று பரிசோதனை அறிக்கையை தயாரிக்க சிறிய காலஅவகாசம் தேவைப்படும் என காணாமல் போனவர்களிற்கான பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் குறித்த மனித புதைகுழியில் 323 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 314 எலும்புக் கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.