மரண தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு பதவி வெளிநாட்டவருக்கு!

0

மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடைவதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் மீண்டும் நாட்டில் தலை தூக்கியுள்ள போதை பொருள் பாவனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை அமுல் படுத்த முடிவு செய்துள்ள நிலையில் விரைவில் ஒரு பகுதியினருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.