மாகந்துரே மதூஷின் இலங்கை வீடு முற்றுகை!

0

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் கம்புருப்பிட்டிய-மாவரலயில் அமைந்துள்ள வீட்டை சோதனையிடுவதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

மேலும் கொழும்பிலிருந்து சென்ற பொலிஸ் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மாவரலே காவல்நிலைய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் இவர்களுடன் இணைந்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

மாவரலேயில் உள்ள மதூஷின் வீட்டில் அவரது மனைவி, தாய் மற்றும் பிள்ளகைள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச் சீட்டை வைத்திருக்கும் ஒருவரும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர் கம்புருப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி என தேசிய நாளிதழ் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை கம்புருப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரைத் தவிர வேறு எந்த உறுப்பினரும் தற்போது வெளிநாடு செல்லவில்லை என பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஆனந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் பிரதேச சபை தவிசாளர் மருத்துவப் பரிசோதனை ஒன்றிற்காக தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதூஷ் என அறியப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித உள்ளிட்ட 25 பேர் கடந்த 5ஆம் திகதி டுபாயிலுள்ள நட்சத்திர விடுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.