முகநூலில் முதன் முதலாக குருதிக்கொடை சவால் அறிமுகம்! நல்ல திட்டத்துக்கு ஆதரவு அளிப்போம்

0

முகநூலில் முதன் முறையாக குருதிக்கொடை சவால் என்னும் புதிய திட்டம் ஜெயமதன் ஞானகாந்தன் என்ற இளைஞர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .இந்த திட்டம் தொடர்பான குறித்த இளைஞரின் முக நூல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது .

இலங்கையை பொறுத்தவரை இரத்த வங்கிகளில் குருதிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது .எனவே இளைஞரின் குறித்த திட்டத்துக்கு அனைவரும் கைகொடுத்து இந்த திட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு ஈழம் நியூஸ் இணையக்குழுமம் கோரிக்கை விடுக்கின்றது.

2019 ம் ஆண்டின் முதலாவது இரத்த தானம் அம்மாவின் பிறந்த தினத்தில்…….பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

அம்மா இறந்தாலும் இந்த சமூக சேவை வளமை போன்று தொடர்கின்றது .58 வயது வரை இரத்த தானம் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் திடமான உறுதியுடன் இருக்கின்றேன் .தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு ஒருதடவை இந்த சேவையை செய்ய கூடிய உடல் ஆரோக்கியத்தை அளித்த கடவுளுக்கு நன்றிகள் .

இன்றைய தினம் முக நூலில் முதன்முறையாக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .Blood donation challenge என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு முன்மாதிரியாக இன்று நான் இரத்த தானம் செய்துள்ளேன் .

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முக நூலில் பல்வேறு challenges ஐ பார்த்து வருகின்றோம் .நாமும் அதில் பங்கு பற்றி வருகின்றோம் .

சில சவால்கள் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ள படுகின்றது .உதாரணமாக ALS Ice Bucket Challenge இனை குறிப்பிடலாம் .இந்த சவால் amyotrophic lateral sclerosis என்ற நோய் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் இந்த நோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவும் முகமாக உருவாக்கப்பட்டு வெற்றியும் பெற்றது .

இதனை தொடர்ந்து எம்மவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் rice bucket Challenge இனை அறிமுகப்படுத்தினார்கள் .அது கணிசமான அளவு வெற்றியும் பெற்றது .

மேல குறிப்பிட்டது போன்ற ஆரோக்கியமான சவால்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல சவால்கள் வெறுமனே பொழுது போக்கினை மையமாக கொண்டே செயற்படுத்தப்படுகின்றது .

உதாரணமாக black and white photo Challenge , no makeup selfie Challenge ,10 years photo Challenge போன்றவற்றினை குறிப்பிடலாம் .அண்மையில் கூட 90 s கிட்ஸ் என்று ஒரு உருவாக்கப்பட்டு அதில் பலரும் நாட்டத்துடன் பதிவுகளை பதிவேற்றினார்கள் .

நான் அறிமுகப்படுத்தும் இந்த blood donation Challenge தொடர்பான அறிவுறுத்தல்கள் கீழே

1 . ஒருவர் இரத்த தானம் செய்து விட்டு அவருடைய புகைப்படத்தினை முகநூலில் பதிவேற்ற வேண்டும் .

2 .படத்தினை பதிவேற்றிய பின்னர் ஆக குறைந்தது 10 நண்பர்களை இந்த சவாலுக்கு அழைத்து அவர்களது பெயர்களை குறிப்பிட வேண்டும் .

3 .மேற்கூறிய இரண்டு விடயங்களையும் செய்த பின்னர் இந்த திட்டத்தினை பலருக்கும் அறிமுகப்படுத்தும் முகமாக ஆக குறைந்தது 50 நண்பர்களுக்கு டக் செய்தல் வேண்டும் .

4 சவாலினை ஏற்றுக்கொள்ளும் நண்பர் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஆக கூடியது நான்கு மாதங்களுக்குள்ளும் , பெண்ணாக இருப்பின் ஆக கூடியது 6 மாதங்களுக்குள்ளும் இரத்த தானம் செய்து விட்டு மேல கூறப்பட்டுள்ள 1 ,2 ,3 இனை பின்பற்றல் வேண்டும் .

5 . சவாலினை ஏற்றுக்கொண்ட நபர் தவிர்க்க முடியாத காரணத்தினால் இரத்த தானம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்ய முடியவில்லை என்றால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை ,அல்லது நண்பர்களில் ஒருவரை இரத்த வங்கிக்கு அழைத்து சென்று சவாலினை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் .

இந்த திட்டத்தினை வெற்றிகரமாக ஆரம்பிக்கும் பொருட்டு இனறைதினம் நான் இரத்த தானம் செய்து எனது புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளேன் .அத்துடன் எனது நண்பர்கள் பட்டியலில் இருந்து 32 நண்பர்களை இந்த சவாலுக்கு தெரிவு செய்கிறேன் .நான் தெரிவு செய்யும் நண்பர்கள் இரத்த தானம் செய்து நான் கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி இந்த திட்டம் வெற்றியடைய முழுமையான ஆதரவினை வழங்குவார்கள் என்று முழுமையாக நம்புகின்றேன் .

தயவுசெய்து எனக்கு நிறை காணாது , எனக்கே இரத்தம் ஏற்ற வேண்டும் , என்னிடம் சத்து இல்லை என்ற எதிர்மறையான பின்னூட்டங்களை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

உங்களால் இரத்த தானம் வழங்க முடியுமா இல்லையா என்பதனை இரத்த வங்கியில் உள்ள வைத்தியர் தீர்மானிக்கட்டும் .

நல்ல திட்டங்களும் நல்ல பதிவுகளுக்கும் முக நூலில் ஆதரவு கிடைப்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம் .

ஒவ்வொரு தடவையும் நீங்கள் இரத்த தானம் செய்யும் போது 3 உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது .நாளை உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ இரத்தம் தேவை படலாம்.ஆகவே தயவு செய்து இந்த திட்டம் வெற்றி பெற ஆதரவு அளியுங்கள் .

ஆக குறைந்தது இந்த பதிவினை share செய்து உங்கள் ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.

-ஜெயமதன்-

Leave A Reply

Your email address will not be published.