முடி வெட்டிய நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர் ! நேர்மைக்கு கிடைத்த பரிசு ! நடந்தது என்ன ?

0

வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருகையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை சில கடைக்காரர்கள் உயர்த்துவார்கள்.

ஒரு கடையில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பொருள் வெள்ளைக்காரர்களை பார்த்தவுடன் அதன் விலை பன்மடங்கு உயர்த்தப்படும்.

அவர்களும் தங்கள் நாட்டு பணத்தின் மதிப்பு இந்தியாவில் அதிகம் என்பதால் சொல்கிற விலையை கொடுத்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

ஆனால், அகமதாபாத்தில் உண்மையாக இருந்த நபரை பாராட்டிய வெள்ளைக்காரர் அதிக பணம் கொடுத்து சென்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

நோர்வே நாட்டை சேர்ந்த வெள்ளைக்காரர் ஒருவர் தெருவில் இருந்த சலூன் கடையில் முடி வெட்டியுள்ளார். தனக்கு பிடித்தமான முறையில் மிகவும் நேர்த்தியாக முடி வெட்டியிருந்தார்.

முடிவெட்டியதற்கான பணம் எவ்வளவு என்று கேட்கையில் கடைக்காரர் மிகவும் நேர்மையாக 20 ரூபாய் என்று கூறியுள்ளார். இதனைகேட்டு ஆச்சரியமடைந்த வெள்ளைக்காரர் 30 ஆயிரம் பணம் கொடுத்து சென்றுள்ளார்.

இதனை குடும்ப தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.