யாழில் வாள்வெட்டு சம்பவங்கள்; வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கு வருகிறது ஆப்பு!

0

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசிடம் விண்ணப்பிக்க உள்ளதாக வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலையத்தில் இன்று (2) சனிக்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரவுள்ளோம். இந்நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.