யாழ்ப்பாணத்தில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம் ! மடக்கி பிடித்த பொலிஸார் ! நடந்தது என்ன ?

0

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸார் இன்று குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அத்தோடு அவரால் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.