யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணிலின் செயலாளரின் ஸ்மார்ட் தொலை பேசி திருட்டு !

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு சென்ற அவரது செயலாளர்களில் ஒருவரின் தொலைபேசி திருட்டுப் போயுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே அவரின் கைப்பையிலிருந்த தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

55 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிதிறன் தொலைபேசியே (ஸ்மார்ட் போன்) காணாமல் போயுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிகழ்வில் பங்கேற்றிருந்த போது தனது கைப்பைக்குள்ளிலிருந்து திருடப்பட்டுள்ளது என்று பிரதமரின் செயலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முதல் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

முறைப்பாட்டாளரின் தொலைபேசி இணைப்பை வழங்கிய நிறுவனத்திடமிருந்து தொலைபேசி திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட இடம்தொடர்பான விவரங்களைக் கோருவதற்கு கட்டளை வழங்குமாறு அந்த அறிக்கையை பொலிஸார் தாக்கல் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பதை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரால் கோரப்படும் தகவல்களை வழங்குமாறு குறித்த நிறுவனத்துக்கு கட்டளையிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.