யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து ! எச்சரிக்கை மக்களே

0

யாழ். குடாநாட்டில் யுவதிகள், மாணவிகளை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் யுவதிகளுக்கும், மாணவிகளுக்கும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக குழுவொன்று ஏமாற்றி வருகிறது.

இதன்மூலம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர் குழு பற்றி பொதுமக்கள் முறைப்பாடு செய்து வருவதாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி மூலம் முற்பணம் செலுத்துமாறு அறிவுறுத்தும் குழுவினர், பின்னர், தமது தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கின்றனர்.

அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினால் அவை பாவனை இல்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறு பணத்தைச் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவிகள் தொடர்பாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.